“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..!

 

சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படதிற்கு பிறகு சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது.

ஆனால் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து கன்னட படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் சிம்பு .

இந்நிலையில் இந்த மாத இறுதியில் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக சிம்பு மாநாடு படத்தின் திரைக்கதையை படிப்பதுபோல வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி