காபூல்:

பெண்களால், பெண்களுக்காக ஒளிபரப்பபப்படும் புதிய டிவி சேனல் ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல துறைகளில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக ஸான் டிவி தனது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது.

இங்கு செய்தி வாசிக்கும் அனைவருமே பெண்கள். தயாரிப்பாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருமே பெண்கள் தான்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே உள்ள பல செய்தி சேனல்களில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளனர். ஆனால் முதன்முதலாக இந்த தொலைக்காட்சியில் பணியாற்றும் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘இதில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பெண்களுக்கானது தான். இந்த நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் தங்கள் உரிமை குரலை எழுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்’’ என்று 20 வயதாகும் டிவி சேனல் தயாரிப்பாளர் கதிரா அஹ்மாதி தெரிவித்துள்ளார்.