அமெரிக்க போலீசை திக்குமுக்காட வைத்த கிளி

நியூயார்க்:

கிளி போல பெண் என்பார்கள்.. ஆனால் அமெரிக்காவில் பெண் போல பேசி, போலீசாரை திக்குமுக்காட வைத்திருக்கிறது ஒரு கிளி.

நியூயார்க் நகரின் ஓரிகான் என்ற பகுதியில் உள்ள வீட்டிற்கு கூரியர் டெலிவரி செய்ய வந்திருக்கிறார் லீபர்ட் என்ற இளைஞர்.

கதவைத் தட்டியிருக்கிறார்.

அப்போது வீட்டிற்கு உள்ளே இருந்து ”ஹெல்ப் ஹெல்ப்’ என்ற பெண் குரல் ஒன்று கேட்டு இருக்கிறது. குழப்பத்துடன் மீண்டும் கதவைத் தட்டியிருக்கிறார். அப்போதும் அத போல  உதவிக் குரல் கேட்டு இருக்கிறது.

இதனால் பதட்டம் அடைந்த அவர் தன் மனைவிக்கு போன் செய்து, என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார். அவர் மனைவி,  போலீசை அழையுங்கள் என்று சொல்ல.. இவரும்  அமெரிக்காவின் அவசர உதவி எண் 911க்கு அழைத்து  பெண் ஒருவர் வீ்ட்டுக்குள் அடைப்படிருப்பதாகவும்  உதவி கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதையயடுத்து அந்த பகுதியின் போலீசார் அவசரமாக அவசரமாக வந்தனர்.

வீடு பூட்டியிருந்தது. சத்தம் ஏதும் இல்லை. சரி கிளம்புவோம் என்று நினைத்தபோது,  வீட்டுக்குள்ளிருந்து மீண்டும் ”ஹெல்ப் ஹெல்ப்” என சத்தம் கேட்டது.

பதட்டமான போலீசார் ஜன்னல் வழியாகப் பார்த்தால்… பெண் போலவே கத்தியது கிளி என தெரியவந்தது.

தற்போது அந்த காவலர்கள் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.tps://patrikai.com/simbu-kidding-kamal-and-rajni-by-his-song/