மனோகர் பரீக்கர் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பியவர் கைது

பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடல்நிலை குறித்து, தவறான தகவல் பரப்பிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் கணைய நோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மனோகர் பரீக்கரின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக கென்னத் சில்வேரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு பனாஜி தொகுதி இடைத்தேர்தலில் பரீக்கருக்கு எதிராக போட்டியிட்ட கென்னத் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.