தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

நெல்லை:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம்  காரணமாக நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து, ஆக்கப்பூர்வமாக விவசாய பணிகளுக்கு உபயோகப்படுத்த உத்தரவிடக்கோரி நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

மனுவில், தாமிரபரணி ஆற்றில் ஓடும் நீர் மருதூர், ஸ்ரீ வைகுண்டம் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து திறந்து விடப்படுகிறது. இதில் பெரும்பாலான நீர்  வீணாக கடலில் கலந்து வருகிறது.  இந்த தண்ணீர் கடலில் தடுப்பதை தவிர்த்து திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற பகுதிகளும் திருப்பி விட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாமிர பரணி ஆற்றின் செயற்பொறியாளரிடம் பொதுப்பணித்துறை உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

You may have missed