சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலியின் பிரேக் அப் தான் காரணம்.. நடிகரின் ஊர்க்காரர் திடீர் வழக்கு..

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலியின் பிரேக் அப்தான் காரணம்,,
நடிகரின் ஊர்க்காரர் திடீர் வழக்கு..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில தினக்க ளுக்கு முன் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இவரது சொந்த ஊர் பீகாரில் உள்ள பாட்னா வாகும். சுஷாந்த் தற்கொலை குறித்து போலீ ஸார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த்தின் நண்பர் மற்றும் காதலி ரெயிஹா சக்ரபோர்த்தி போன்றவர்களிடம் வாக்கு மூலம் பெறப் பட்டுள்ளது.

 

ரெயிஹா சக்ரவர்த்தி ஒரு மாடல் அழகி அத்துடன் தெலுங்கில் துனீகா துனேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கி றார்.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த குண்ட்குமார் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், சுஷாந்தின் தற்கொலைக்கு அவரது காதலிதான் காரணம். சுமார் ஒரு வருடமாக சுஷாந்த் சிங்குடன் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி சேர்ந்து வாழ்ந்தார். திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் ரெயிஹா சுஷாந்த்தை விட்டு சென்றுவிட்டார். இதில் சுஷாந்த் மனவருத்தம் அடைந்தார். தனது இன்ஸ்டாகிராமில் வைத்திருந்த ரெயிஹா படங்களை சுஷாந்த் சிங் டெலிட் செய்தார். அதை சுஷாந்தே தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் நடந்த 2 வாரங்களுக்குப் பிறகுதான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.