விருத்தாசலம்:

ணல் குவாரி அமைக்கக் கோரி முட்டி போட்டு மனு அளித்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இயங்கி வந்த மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டன.  இதனால் மாட்டு வண்டிகளை மட்டுமே நம்பி வாழ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மீண்டும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக  மாட்டு வண்டி
களுடன் பேரணியாக வந்து கோட்டாட்சியரிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் புதுக்கூரைப்பேட்டை அருகேயுள்ள மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு பெரியார்நகர், கடலூர் ரோடு வழியாக பேரணியாக வந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.

இதே போல பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று முட்டி போட்டபடியே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து,  கோட்டாட்சியர் சந்தோஷ் சந்திராவிடம் புகார் மனு  அளித்தனர்.