“ஒரு புகைப்படம், ஒரு மாநிலத்தை ஆள்கிறது!” : பிபிசி வியந்த “அம்மா” ஆட்சி!

மிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது இலாக்காக்கள் அமைச்சர், ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

bbc

இந்நிலையில் பி.பி.சி.யின் உலகச் செய்திகள் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. அதற்கு இப்படி தலைப்பு வைத்துள்ளனர்:
“ஒரு புகைப்படம் இந்திய மாநிலத்தை ஆள்கிறது!”
அந்த செய்தியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் படம் முன்னிலைபடுத்தி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
பிற அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த கூட்டங்கள் நடத்தும் போதும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை கொடுப்பதையும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையடுத்து உலக மக்கள், தமிழக அரசை, அரசியலை வியப்புடன் பார்க்கிறார்கள்.