நிகழ்வு தொடுவான தொலைநோக்கி  எனப்படும் Event Horizon Telescope உருவாக்கப்பட்டது. இது உலகில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்ட வானலை தொலைநோக்கிகளின் பிணையவழி இயங்கும் தொலைநோக்கி. அந்த எட்டு ‘தொலைநோக்கிகள்”  வழியே கிடைத்த தகவல்கள் ஒலி அலையாகவே கிடைத்தவை. கிடைத்த

ஒலியை கொண்டு படம் வரையும் பணியினை அடாமிக் கடிகாரத்தைக்கொண்டு மீீ கணினிக்கு அனுப்பப்பட்டது. அந்த மீ கணினியானது தகவல்கள்  எல்லாம் ஒருங்கிணைத்து நிழற்படமாக அமைத்தது.

இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சேமிப்பகத்தின் மொத்த கொள்ளவு  5 petabytes , ஒரு பெட்டா பைட் என்பது 1000 டெராபைடுக்கு சமமானது. 1 டெராபைட் என்பது 1000 ஜிகா பைட்டினால் ஆனது. ஒரு படம் ஒரு ஜிகாபைட் என்று வைத்துக்கொண்டாலும் இந்தகொள்ளளவில் 5 லட்சம் படங்களை சேமிக்காமல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பயன்பாட்டை உருவாக்கிய  MIT ன் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக இளம் பொறியாளர்  கேட்டி புமன் இந்தத்திட்டத்தில் சேரும்போது  2016ல் TEDx உரையில் தொலைநோக்கி வழியாக கிடைக்கும் தகவல்களையும், இரைச்சலான தகவல்களையும் கொண்டு படங்களை உருவாக்கும் அல்காரிதம்களை  உருவாக்குவதில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்திருந்தார்.

ஆனால் சோதனைகளை தாண்டி அவர் இன்று இந்த திட்டத்தினை திறம்பட செயல்படுத்தியிருக்கிறார்

இதோ அவரின் TEDx உரை  https://youtu.be/P7n2rYt9wfU

Event Horizon Telescope கிடைத்த ஆய்வறிக்கையே ஒரு ஆய்வுக்கட்டுரையாக இங்கே பதிப்பித்திருக்கிறார்கள். கீழேயுள்ள இணைப்பை சொடுக்கி உரையை  ஆய்வை காணலாம்.
https://iopscience.iop.org/journal/2041-8205/page/Focus_on_EHT

நெப்டியுன்
நெப்டியுன் சுரியனை சுற்றிவருவது போல் இந்த கருந்துளையை சுற்றிவர 200 ஆண்டுகளாகுமாம்.

எப்படியோ இந்த தொழில்நுட்பம் பல பெரிய சாதனைகளை உள்ளடக்கியுள்ளது. இன்னமும் பல மாற்றங்கள் அறியப்படாத தகவல்கள் நமக்கு கிடைக்கும்

விண்வெளி பற்றி மேலும் படிக்க பத்திரிக்கை.காம் வரும் விண்வெளி விந்தைகள் தொடரை மறவாமல் படியுங்கள்

-செல்வமுரளி