குஜராத் ‘கிர்’ வனவிலங்கு சரணாலயம் பகுதியில் ஒருவருக்காக வாக்குச்சாவடி! 100% வாக்குப்பதிவு

குஜராத் மாநிலம், ஜுனாகாத் மாவட்டத்தில் உள்ள கிர் காடுகள், சிங்கங்களின் மிகப்பெரிய சரணாலயமாக உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் ஜூனாகத்.

தேர்தல் நேரங்களில் இவர் ஒருவருக்காக மட்டும் மின்னணு வாக்குச்சாவடி அமைத்து இவரை ஓட்டளிக்க வைக்கின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அவரும் வாக்களித்துள்ளார். இந்தநிலையில், இன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறிய ஜூனாகத், ஒரு ஒட்டுக்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை செலவு செய்கிறது. நானும் எனது வாக்கினை அளித்து, 100 சதவிகிதம் வாக்கு பதிவை நிறைவு செய்துள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

வனத்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் காட்டிற்குள் பயணம் செய்வதால்,  எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.