குஜராத் : படேல் சிலையை தொடரும் பிரம்மாண்ட புத்தர் சிலை

--

கமதாபாத்

ற்றுமை சிலை என அழைக்கப்படும் படேல் சிலையை தொடர்ந்து குஜராத்தில் ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலை அமைக்கப்பட உள்ளது.

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லப்பாய் படேல் சிலையை ஒற்றுமை சிலை என அழைக்கின்றனர். உலகில் அதிக உயரமான சிலையான இந்த ஒற்றுமைச் சிலையின் உயரம் 182 மீட்டர் ஆகும். இந்த சிலையை தொடர்ந்து பிரமாண்டமான சிலைகள் அமைக்கும் அறிவிப்புகளை மகாராஷ்டிரா மற்றும் உத்திரப் பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு சாராத ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சங்காகியா ஃபவுண்டேஷன் ஆகும். இந்த நிறுவனம் 80 அடி உயர்த்தில் ஒரு புத்தர் சிலையை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. குஜராத் தலைநகரில் அமைக்கப்பட உள்ள இந்த புட்தர் சிலை அமைக்க இடம் அளிக்கக் கோரி குஜராத் மாநில அரசுக்கும் இந்த தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்த தொண்டு நிறுவன தலைவர் பண்டே பிராஷில் ரத்னா, “வட இந்தியாவில் பீகார், உ.பி. ஆகிய மாநிலங்களில் மட்டுமே புத்த கொள்கைகள் கடைபிடிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் புத்தரை விரும்பும் மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்றாகும். ஆகவே அவருக்கு 80 அடி உயர சிலை ஒன்றை நிறுவ எங்கள் தொண்டு நிறுவனம் எண்ணி உள்ளது.

அதற்கான நிலத்தை அளிக்க குஜராத் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரவில் அரசு எங்களுக்கு நிலம் அளிக்கும் என நம்புகிறோம். அத்துடன் புத்தரின் கொள்கைகள் குறித்த கல்விக்காக ஒரு பல்கலைக்கழகம் நிறுவ நாங்கள் உத்தேசித்துள்ளோம். முன்பு நாலந்தா, தட்சினசீலா பல்கலைக்கழகங்கள் இருந்தது போல குஜராத் பகுதியிலும் வல்லபி என ஒரு பல்கலைக் கழகம் இருந்துள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.