லாஸ் ஏஞ்சல்ஸ்:

டந்த மாதம் 26 ம் தேதி (ஜனவரி) ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் கோபி ப்ரையன்ட், அவரது மகளுக்கும் வரும் 24ந்தேதி ஸ்டேபிள்ஸ் மையத்தில் பொது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸின் வடமேற்கில் உள்ள கலிஃபோர்னியாவின் கலபாசஸில் உள்ள மலைப்பாதையில் ஹெலிகாப்டர் மோதியதில் பிரபல கூடைபந்து வீரர் கோபி (வயது 41) பிரயன்ட் அவரது மகள் கியானா பிரயன்ட்  (வயது 13)  உள்பட 9 பேர் பலியாகினர்.

இவர்கள் மறைவு காரணமாக நடைபெற இருந்த   லேக்கர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் இடையே ஸ்டேபிள்ஸ் சென்டரில் (Staples Center) நடக்க போட்டியை அமெரிக்க தேசிய கூடைப்பந்து கழகம் ரத்து செய்திருந்தது.

அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிப்ரவரி 1ந்தேதி  நடைபெற்ற  நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது,  ஏராளமானோர்  பிரையன்ட்டின், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஜெர்சியை அணிந்து மலர்அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பிரையன்ட்களுக்கான பொது நினைவு பிரார்த்தனை வரும் (பிப்ரவரி) 24 ஆம் தேதி ஸ்டேபிள்ஸ் மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள டைம்ஸ் ஸ்டேபிள்ஸ் சென்டரில்  சுமார் 20ஆயிரம் பேர் வரை இருந்தபோதிலும், கூட்டம்  அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு வருபவர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரயன்ட் மரணம் குறித்து வெளியாகி உள்ள உடற்கூறாய்வு அறிக்கையில், “ஹெலிகாப்டர் விபத்தில்” ஏற்பட்ட நீடித்த  அதிர்ச்சி காரணமாக அவரது  மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.