பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்படி ஒரு கேள்வி!

நெட்டிசன்:

தகவல் :சாஸ்திரி மல்லாடி, மதுரை

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் (social science) பாடத்தில் கேட்கப்பட்ட வினா என்ன தெரியுமா?


வினா 13. இந்தியத் திட்டக் குழுவின் தலைவர் யார்?

அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) நிதியமைச்சர்
ஈ) குடியரசுத் துணைத் தலைவர்

– இதில் விஷயம் என்னவென்றால், மத்திய அரசு, கடந்த 2015ம் வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் திட்டக் குழுவையே கலைத்து விட்டது!! .

அதற்கு பதில் NITI (National Institution of Transforming India) Ayog என்ற அமைப்பை ஏற்படுத்திப் பிரதமர் தலைமையில் அது இயங்கி வருகிறது.