உலக இசைக் கலைஞர்களுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கில் உள்ளது . இந்த அவல நிலை குறித்தும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உலகின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

உலகம் முழுவதுமுள்ள இசைக் கலைஞர்கள் இணைந்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் தி வேர்ல்ட்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கவுள்ளனர். 50ஆம் ஆண்டு உலக பூமி தினத்தை முன்னிட்டு 22.04.2020 அன்று இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடாஷா பெடிங்ஃபீல்ட், கோடி சிம்ப்ஸன், ஓபரா பாடகர் ஜானதன் சிலியா ஃபரோ, எரிகா அட்கின்ஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து பாடவுள்ளனர்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்பாடல் உருவாக்கப்படவுள்ளது. இப்பாடலுக்காக வரிகளை ஸ்டீஃபன் ஸ்குவார்ட்ஸ் எழுதியுள்ளார்.