‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா….?

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ‘தா ஃப்யூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் புதிய கலை அமைப்பு தமிழகத்தின் கலாச்சார விஷயங்களை இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லும் விதமாக ‘தா ஃப்யூச்சர்ஸ்’ கலை அமைப்பை உருவாக்கி உள்ளோம் என கூறியுள்ளார் .

இப்போது பாடல் வரிகள் புரிவதில்லை என்ற கருத்து உள்ளது. நல்ல பாடல்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சில நேரம், நடனம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக சில பாடல்கள் உருவாகலாம். என கூறிய அவர் , ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இடம்பெறுகிறாரா என்பதை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம்தான் உறுதிசெய்ய வேண்டும். வைரமுத்து பணியாற்றுவது குறித்து படக்குழுவினருடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .