ற்கெனவே ஆஸ்கார் வென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இன்னாரு உலக விருது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவருக்கு இந்த விருது கிடைப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

 

தொடர்ந்து படியுங்கள்.

சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தை, இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியரான குரிந்தர் சந்தா என்பவர் இயக்கியுள்ளார். ஹுமா குரேஷி, ஹக் போனிவில்லே,மறைந்த நடிகர் ஓம்புரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். .
இங்கிலாந்தில் வெளியாகி உள்ள இந்த படம், ‘பார்டிசன் – 1947’ என்ற பெயரில் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

 

ஆங்கிலேயர் ஆட்சிகால இறுதியில் வைஸ்ராய் இல்லத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. .

 

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் சிறப்பாக ஒலிப்பதிவு செய்துள்ளார். இதையடுத்து உலக ஒலிப்பதிவு விருது வழங்க ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அவருக்கு விருது கிடைக்கும்.

 

ஏ ஆர் ரகுமானுக்கு தங்கள் வாக்கை செலுத்த விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் வாக்களிக்கலாம்.

 

https://www.wsavoting.com/en/publicchoice/47