புளோரிடா:
மெரிக்காவில் புற்றுநோயை குணப்படுத்தும் எளிய முறையை கண்டுபிடித்த டாக்டர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புற்றுநோயை எளிதாக முற்றிலும் குணமாக்குவதாக நம்பப்படும் வலிமையான மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். அவரோடு பணி செய்த மற்ற மருத்துவர்களும் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கின்றனர்.
1cancer
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெஃப் ப்ராட்ஸ்டிரீட். இவர் GcMAF என்ற உடலில் இயற்கையாக காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு அதன்மூலம் கேன்சர் செல்களை அழிக்கும் மருத்துவ முறையை கண்டறிந்து பரிசோதித்து அதை ஒரு காணொளி காட்சிமூலம் உலகுக்கு அறிவித்தார். இதையடுத்து அவரும் அவரது குழுவினரும் மர்மமான முறையில் வெவ்வேறு இடங்களில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டாக்டர் ஜெஃப் ஏற்கனவே ஆட்டிசம் பாதிப்பு பற்றி சில சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில்  டாக்டர் ஜெஃப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் வெகுவிரைவிலேயே இது தற்கொலை என்ற முடிவுடன் வழக்கு மூடப்பட்டும் விட்டது.
இப்போது மருத்துவர் ஜெஃப் வெளியிட்ட அந்த புற்றுநோய் கிருமியை அழிக்கும் மருத்துவ விளக்கக் கானொளி விரைவாக மக்கள் மத்தியில் பரவி GcMAF குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ முறை வளர்த்தெடுக்கப்பட்டால் பல லட்சங்கள் செலவிட்டு ரேடியேஷன், கீமோதெரப்பி போன்ற சிகிச்சைகளை செய்ய தேவையிருக்காது.
வெகு எளிதாக கேன்சரை குணப்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் கேன்சரை வைத்து கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் மருத்துவத்துறையின் பணமுதலைகள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் அவர்கள் டாக்டர் ஜெஃப் மற்றும் அவரது குழுவினரை திட்டமிட்டு கொன்றுவிட்டதாகவும் சில நம்புகின்றனர். அவர்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவர் இறந்தவுடன் இவரது அலுவலகத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் அவசரவசரமாகப் பரிசோதனை செய்ததும் தெரியவந்துள்ளது.
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/Cancer-cells-destroyed-by-First-Immune-GcMAF-gcmaf.eu_.mp4[/KGVID]
நன்றி:  http://trendingnewsguide.com/2016/08/20/florida-doctor-found-dead-after-announcing-a-stunning-breakthrough-in-both-treatment-and-cure-for-cancer/