இங்கிலாந்தில் காணப்பட்ட அரிய வகை கடற்பறவை

க்கிங்ஹாம்ஷையர்

ங்கிலாந்து  தெரு ஓரமாக சீகுல் எனப்படும் அரிய வகை கடற்பறவை கரியில் விழுந்து கண்டெடுக்கப்பட்டது.

கடற்கரை ஓரங்களில் காணப்படும் சீகுல் என்னும் கடற்பறவை உலகில் ஒரு சில கடற்கரைகளில் மட்டுமே வசித்து வருகின்றன. இவை மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் இவை அரிய வகை பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வகை பறவைகளை விலங்கியல் நிபுணர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் ஷயர் நகரில் ஏ 41 சாலையில் ஒரு ஆரஞ்சு கலர் பறவை தெரு ஓரமாக பறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்துள்ளது. இது குறித்து அங்குள்ள டிகிவிங்கிள்ஸ் விலக்கு மற்றும் பறவைகள் மருத்துவ மனைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த பறவையை மீட்டுள்ளனர்.

அவர்கள் இது சீகுல் என அழைக்கப்படும் கடற் பறவை என்பதை கண்டறிந்தனர்.

அந்த பறவை கரியில் விழுந்திருந்ததால் அதன் இறகுகள் முழுவதும் கரியாகி பறக்க முடியாமல் இருந்துள்ளது. அந்த பறவை எப்படி அங்கு வந்தது என்பதும் எவ்வாறு கரியில் விழுந்தது எனவும் கண்டறிய முடியவில்லை. அந்த பறவையை நன்கு கழுவி அதற்கு உணவிட்டு வளர்த்து வருகின்றனர். அதற்கு வினி என பெயர் இடப்படுள்ளது.

தற்போது சற்றே களைப்புடன் காணப்பட்டாலும் வினி நல்ல ஆரோக்யமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வினி களைப்பு நீங்கி முழு பலம் பெற்றதும் அந்த பறவையை விடுவிக்க மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: covered with curry, Found in england street, Orange seagull
-=-