ம்பேடுசா, துனிசியா

கதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது மத்திய தரைக் கடல் பகுதியில்  மோசமான வானிலை காரணமாக கடும் கடல் சீற்றம் காணப்படுகிறது.  அகதிகள் கப்பல் மற்றும் பல படகுகள்  இதனை அறியாமல் கடலில் இறங்கிக் கடந்த சில நாட்களாக விபத்தில் சிக்கி மூழ்கி  வருகின்றன.   இந்த விபத்துக்களில் ஏராளமான உயிர்ச்சேதம் உண்டாகிறது

நேற்று துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாகக் கடல் அலையில் சிக்கிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது.

இந்த தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 22 பேரைப் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் உயிரிழந்த 13 பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மத்தியதரைக் கடலில் நடந்த விபத்துகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.