இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் சென்னை காலி? : அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு

திர்ச்சி அடையாமல் படியுங்கள்…

 

சென்னை என்ற இடம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறது என்கிறது ஓர் ஆய்வு.

தினந்தோரும் எவ்வளவோ பிரச்னைகள் புதிது புதிதாக முளைத்து வருகிறது.   ஆனால் உலகின் முக்கியப் பிரச்னை ‘உலக வெப்பமயமாதல்’. இந்த வெப்பமயமாதலால் மட்டும் இந்தப் புவியில் எவ்வளவோ மாற்றங்கள்  நம் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  , மிகக்கொடுமையான வெப்பம், மழை இல்லாமை போன்ற  அனைத்துக்கும் வெப்பமயமாதல்தான் முக்கியக் காரணம்.   ‘தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம்’ இந்த வெப்பமயமாதல் தான் இன்னும் ஐம்பது வருடங்களில் சென்னையை மூழ்கடிக்கப்போகிறது என்று  கூறியுள்ளது.

தெற்கு, வடக்குப் பகுதிகள் தவிர கிரீன்லாந்து முழுவதுமே பனிமலைகளால் ஆனதே இந்த பூமி.  ஒரே நேரத்தில் இந்த அனைத்துப் பனிப்பாறைகளும் உருக ஆரம்பித்தால், நிலமட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்துக்கு மேல் தண்ணீர் அளவு பெருகி பூமியே ஜல சமாதி ஆகிவிடும்.   உலக வெப்பமயமாதல் என்பது இந்த அனைத்து பனிப் பிரதேசங்களையும் உருக்கும் ஆற்றல்கொண்டது.  தென் துருவப் பகுதியான அன்டார்டிகாவில் உள்ள பனிப் பாறைகள்  தற்போது ஏற்பட்டுள்ள வெப்பம் அதிகரிப்பின் காரணமாக அதிக அளவில் உருகி வருகின்றன.  அது மட்டுமின்றி மேற்கு மற்றும் கிழக்கு  அன்டார்டிகாவில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பெரிய அளவில் பனிப் பாறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன.   இதனால் மேற்கு அன்டார்டிகா பகுதியில் உருகும் பனிப் பாறைகளால் 4.8 மீட்டர் அளவுக்கும்,  அதுபோல, கிழக்கு அன்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகினால் 3.4 மீட்டர் அளவுக்கும் கடல் நீரின் மட்டம் உயரும்.   இதனால் பல கொடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உலகம் முழுவதும் பல நகரங்கள் அழியும்.

இந்தப் பனிப் பிரதேச உருகுதலினால் தமிழ்நாடு எத்தகைய அழிவுக்கு உள்ளாக்கப்படும் என்று ஆராய்ச்சி செய்ததில், “பனிமலை உருகினால் தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும். இந்த அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தால், தமிழ்நாட்டில் சுமார் 1,963 சதுர கிலோ மீட்டர் கடலோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும்.  அது மட்டுமின்றி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 144 சதுர கிலோமீட்டர் பகுதிகள் கடலுக்குள் சென்றுவிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ” சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தப் பனிமலை உருகுதலினால் மட்டும் வெளியேற்றப்படுவர்.  வெப்பம் அதிகமாதலால் தற்போதிலிருந்தே கடல் அரிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். கடல் அரிபின் காரணத்தால் சீற்றம் மிகுந்த கடல் அலைகளும். அடிக்கடி சூறாவளியும் ஏற்படும்.   கடல் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்துக்கு வந்து அனைத்துக் குடிநீரையும் உப்பு நீராக மாற்றிவிடும். இவை எல்லாமே பேரழிவுக்கான ஆரம்பம் ஆகும்.  இது போல் புவி வெப்பமயமாதல் மேலும் மேலும் தொடந்து அதிகரித்துக்கொண்டே வந்தால் 2050-ம் ஆண்டு வாக்கில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் கண்டிப்பாக கடலில்  மூழ்கும்” என்று எச்சரிக்கை தகவல்கள் கொடுத்துள்ளனர், தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியத்தினர்.