உத்திரப் பிரதேசம் : மாமூல் தராத ரிக்ஷா ஓட்டுனரை அடித்துக் கொன்ற போலிசார்
ஷாஜகான்பூர்
உத்திரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் மாமூல் தராத ஒரு ஈ ரிக்ஷா ஓட்டுனரை காவல்துறையினர் அடித்துக் கொன்றுள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஷாஜகான்பூர். அங்கு ஒரு 45 வயதான பாலேஸ்வர் என்னும் நபர் ஈ ரிக்ஷா எனப்படும் மின் ரிக்ஷாவை ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். அங்குள்ள காவல்துறையினர் அங்கு செல்லும் அனைத்து வாடகை வண்டிகளில் இருந்தும் மாமூல் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஈ ரிக்ஷா ஓட்டினர் பாலேஸ்வர் அதற்கு மறுத்துள்ளார். தமக்கு பெரிய குடும்பம் உள்ளதாகவும் அதனல் மாமூல் அளிக்க முடியாது எனவும் கூறி உள்ளார். இதனால் அங்கிருந்த காவல்துறை காவலர்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர். அதன் விளைவாக செவ்வாய் இரவு பாலேஸ்வரை அடித்து உதைத்துள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்து அந்த ரிக்ஷா ஓட்டுனரின் குடும்பத்தினர் மூன்று காவலர்கள் சேர்ந்து அவரை அடித்துக் கொன்றதாக புகார் அளித்துள்ளனர். பிறகு விசாரணையில் காவலர்களில் ஒருவர் அப்போது அங்கு இலை என்பது தெரிய வந்தது.
புகார் கூறப்பட்ட மற்ற இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல்துரை சூப்பிரண்ட் சின்னப்பா உத்தரவிட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதியப்படும் எனவும் அறிவித்தார். ஆனால் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் மரணத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை ஒட்டி பாலேஸ்வரின் உள் உறுப்புக்களை லாபரட்டரிக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். மருத்துவர் அந்த உறுப்புக்களை பத்திரப் படுத்தி வைத்துள்ளார். இந்த செய்தி குறித்து பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளதாக நெட்டிசன்கள் பதிந்து வருகின்றனர்.