தலித் மாணவி தொட்ட உணவை கீழே எறிந்த பள்ளி உதவியாளர் பணிநீக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் மாணவி மதிய உணவை தொட்டத்தால் அவற்றை கீழே எறிந்த பள்ளி உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கிராமத்தில் நடந்துள்ளது.

உதாய்பூர் கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயாரிக்கப்பட்டது. உணவு சமைப்பதற்கு உதவும் வகையில் கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் மதிய உணவை வாங்கிக்கொள்ளும்படி ஆசிரியர் கூறியுள்ளார். உணவை வாங்க சென்ற மாணவிகளில் ஒருவர் அதனை கையால் தொட்டுள்ளார். அப்போது அங்கிருந்த உதவியாளர் மாணவியை திட்டியதுடன், மாணவி தொட்டி விட்டதால் உணவு கெட்டுவிட்டதாக கூறி அதனை நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து பெண் உதவியாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

midday

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறியபோது “ சமையலறையில் நான் ரொட்டிகளை எடுத்த போது அங்கிருந்த பாய்( வேலைக்காரி) து நீச் ஜாதி கி ஹை ( நீ கீழ் சாதியை சேர்ந்தவள்), நீ இதை தொட்டுவிட்டாதை நான் பார்க்காமல் இருந்திருந்தால் அவற்றை வீட்டிற்கு எடுத்து சென்றிருப்பேன் என்று கூறியதுடன் என்னை திட்டினார். நான் அழுததும் அனைத்து ரொட்டிகளையும் நாய்க்கு எடுத்து வீசிவிட்டார். நான் அவற்றை தொட்டதால் எல்லாதையும் நாய்க்கு போட்டுவிட்டார்” என்று கூறினார்.

இந்த சம்பவம் ஜூலை 2ம் தேதி நடந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியுள்ளார். மேலும், இது குறித்து போலிசில் புகார் அளிக்கவில்லை என்றும், அந்த பெண் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அவரை மன்னித்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

உதய்ப்பூர் பகுதியின் தொடக்க கல்வி இயக்குனரான ஷிவ்ஜி கவுர் கூறுகையில் “ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் பற்றி தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பெண் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவரை வேலையில் இருந்து நிரந்தரமான அனுப்ப சிலர் கருத்து தெரிவித்தனர்” என்று கூறினார்.

உதய்பூர் பகுதியின் பாஜகவின் நிர்வாகியான தேவ் பஜ்தி திங்கட்கிழமை முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி உதவியாளரை உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.