சென்னை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜிஎஸ்டி, கச்சத்தீவு, வருமான வரித்துறை குறித்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து2 தொகுதியில் போட்டியிடுகிறது.  அந்தக் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரும் சிதம்பரம் தொகுதியில் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

இநத் நிலையில் விசிக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல்  அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவர பாராளுமன்றத்தில் வலியுறுத்துவது,

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை,

ஜனநாயகத்திற்கு எதிரான சனாதன பாசிச சக்திகளை அகற்றுவது,

தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு,

இந்திய மொழிகள் நல அமைச்சகம்,  

வறுமைகோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துவது,

நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வலியுறுத்துவது,

விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம்,

தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி,

ஜிஎஸ்டி ஒழிப்பு,

விவசாய கடன்கள் ரத்து,

பொதுத்துறை நிறுவனங்களை காக்க நடவடிக்கை,

சுங்க கட்டண நடைமுறைய ரத்து 

நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு,

அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையை சட்டமாக்குவது,

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்தல்,

தமிழை ஆட்சி மொழியாக்குவது,

தமிழகத்திற்கு தனிக்கொடி உரிமை,

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது

மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவது,

சுற்றுசூழலை பாதுகாப்பது

‘மத்திய அரசு வரிவிதிப்புத் திட்டங்களில் பெரும்பாலும் மக்களை அச்சுறுத்தும் அலைக்கழிக்கும் துறை வருமான வரித் துறை ஆகும். இந்த வருமான வரித் துறையினால் அரசுக்கு வருகின்ற வருமானம் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே. இந்த 6 சதவிகித வருமானம் பெரும்பாலும் வருமான வரித் துறை அலுவலகப் பணிக்காகவும் சம்பளத்துக்காகவும் செலவிடப்படுகிறது.

எனவே, இந்த வரிவிதிப்பு அமைப்பினால் பெரும் பொருளாதாரப் பயன் ஏதும் நிலவவில்லை. மாறாக தனிநபர் ஊழல்களுக்கு மட்டுமே அது வழி வகுத்துள்ளது.

அதனால், வருமான வரித் துறையில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்ற அதே நேரத்தில், வருமான வரித் துறையை முழுமையாக ரத்து செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்தரும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்

உள்பட பல்வேறு அறிவிப்புகள் கொண்ட 48 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில்  மக்களவைக்கு போட்டியிடுகிறது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலும் ஜனநாயக சக்திகளை ஒழிப்பதை எதிர்த்து போட்டியிடுகிறது என்று கூறினார்.