கர்நாடகா: ஹம்பி புண்ணிய ஸ்தலத்தில் சிவலிங்கம் உடைப்பு

ஹம்பி:

கர்நாடகா மாநிலம் ஹம்பியில் உள்ள சிவலிங்கத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் ஹம்பி கிராமத்தில் உலக பாரம்பரியம் கொண்ட கோடி லிங்க புண்ணிய ஸ்தலம் உள்ளது. இங்குள்ள ஒரு லிங்கம் மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடந்த சில தினங்களுக்கு முன் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த பெல்லாரி எஸ்பி சேட்டன் உத்தரவிட்டுள்ளார்.

சேட்டன் கூறுகையில், ‘‘காழ்ப்புணர்ச்சி காரணமாக இச்செயல் நடந்திருக்கலாம். அடையாளம் தெரியாத ஆசாமிகள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சமரக சம்ஸ்குருதி சம்ரக்ஷ சேனா சார்பில் ஹம்பி துணை கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பிய பிறகு தான் இச்சம்பவம் வெளிச்சத்துக் வந்தது’’ என்றார்.

இது குறித்து அந்த சேனா அமைப்பு சார்பில் தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நினைவு சின்னங்களை பாதுகாக்கவும், இதை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சேனாவை சேர்ந்த விஸ்வநாத் மாலகி கூறுகையில்,‘‘ புகார் மீது 10 நாட்களுக்குள் நடவடி க்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மறியலில் ஈடுபடுவவோம். இதேபோல் 2012ம் ஆண்டில் புதையல் எடுப்பதற்காக பழங்கால கோபுர கலசங்களை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் இது வரை கைது செய்யவில்லை. அதேபோல் தற்போதும் போலீசார் மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.’’ என்றார்.