நடிகர் சோனு சூட் குறித்து திருச்சி மாணவர் உருவாக்கிய  குறும்படம்..

ரடங்கு காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார், இந்தி நடிகர் சோனு சூட்.
இவரை பற்றி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் தனுஷ்வரன் என்ற மாணவர் குறும்படம் இயக்கியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்திய தனுஷ்வரன், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய சோனு சூட்டின் ரசிகராகவே மாறிப்போனார்.

, ’’எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் சோனு சூட் மற்றவர்களுக்கு செய்த உதவி என்னை ஈர்த்தது. படங்களில் அவரை நான் வில்லனாகவே பார்த்தேன். ஆனால் டி.வி.சேனல்களில் அவரது சேவைகள் குறித்து அறிந்ததும், அவரை பற்றி குறும் படம் தயாரிக்க விரும்பினேன்’’ என்று கூறும் தனுஷ்வரன், 10 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சினிமா பிரமுகர் ஒருவர் துணையுடன், இந்த படத்தில் நடிக்க ஆட்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முன் கூட்டியே ஸ்கிரிப்டை அனுப்பி வைத்தார்.

அவர்கள் . தங்கள் நடிப்பை செல்போனில் பதிவு செய்து, தனுஷ்வரனுக்கு அனுப்பினர்.
அதனை அவரே எடிட் செய்து. 10 நிமிடம் ஓடும் வகையில் யு டியூப்பில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

-பா.பாரதி.