விஜய் சேதுபதி அலுவலகத்தை விரைவில் முற்றுகையிட போவதாக கூறும் வணிகர் அமைப்பினர்…!

ஆன்லைன் பலசரக்கு வியாபார செயலி (App) ஒன்றின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அனைத்து விதமான மளிகைப் பொருட்களையும் இதில் வாங்கிக் கொள்ளலாம் எனும் செயலி அது .

இதற்கு வணிகர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை கண்டிக்கும் விதமாக அவரது அலுவலகத்தை விரைவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுசம்பந்தமாக விஜய் சேதுபதி தரப்பில் ‘‘ஆன்லைன் வியாபாரம் என்ற வார்த்தையால் சிறு வியாபாரிகள், வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந் துள்ளதாக தெரிகிறது. அந்த விளம்பர நிறுவனத்தின் வியாபார நோக்கம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனமே விரை வில் விளக்கம் அளிக்க இருக்கிறது. அதற்கு முன்பு நாங்கள் பேசுவது சரியாக இருக்காது’’ என்று கூறியுள்ளனர் .

கார்ட்டூன் கேலரி