சென்னை:

சசிகலாவின் அடிமை என்று விக்கிபீடியாவில் நையாண்டி செய்யப்பட்ட பதிவு தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக வலம் வருகிறது. விக்கிப்பீடியா என்பது தகவல் களஞ்சியமாக போற்றப்படும் ஓர் அற்புதம் என்று பாராட்டை பெற்றுள்ளது.

இரண்டு தினங்களுக்குமுன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி குறித்து விக்கிபீடியாவில் தகவல் சேகரிக்கச் செல்வோர், அதில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த சொற்பிரயோகம் குறித்து அதிர்ச்சியுற்றனர்.

அதுமட்டுமல்ல அவரை  மன்னார்குடி மாபியாக்களின் அடிமை என்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடிபழனிச்சாமி பதவியேற்றதில் இருந்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்ததை அடுத்து மக்களின் எதிர்ப்பு மனநிலை மேலும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கபீடியா பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு கீழே சசிகலாவின் அடிமை என்று பதிவேற்றம் செய்திருந்தனர்.

அதேபோல் மன்னார்குடி மாஃபியாஅடிமை என்றும் பதிவிட்டு இருந்தனர். அதன்பிறகு அவை நீக்கப்பட்டன.