Random image

டில்லியில் லேசான நிலநடுக்கம்

டில்லி:

டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். எனினும் நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. சில விநாடிகள் நீடித்த இந்த நடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் டில்லியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.