வாஷிங்டன்:

அமெரிக்கா நாட்டின் அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. விமானத்தின் முந்தைய பயணத்தில் பயணி ஒருவர் தனது வளர்ப்பு பாம்பை விமானத்தில் மறந்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியடைந்தனர். இதில் பயணித்த சிறுவன் ஒருவனின் இருக்கையின் கீழ் அந்தப் பாம்பு சுகமாக தூங்கி கொண்டிருப்பதை பார்த்து சிப்பந்திகளிடம் தெரிவித்தான். தூங்கு மூஞ்சி வகையை சேர்ந்த பாம்பு விஷ தன்மை இல்லாதது.

விமான ஊழியர் ஒருவர் பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டு அடைத்தார். இதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். விமானம் எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பறந்து தரையிறங்கியது.

இந்த பாம்பு பிடித்த சம்பவத்தை பயணிகள் பயப்படாமல் கூடிநின்று ரசித்தனர், அனுமதியில்லாமல் பாம்பை விமானத்தில் கொண்டு வந்ததுடன் அதை மறந்துவிட்டுச் சென்றதோடு இல்லாமல், அதை முறைப்படி விமான நிலையத்திற்கு தெரிவித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.