புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிமுதல் இரயில்வே வழித்தடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் பெருகும் கொசுக்களை அழிக்க “மஸ்கிட்டோ டெர்மினேட்டர்” என்ற புதிய ஆபரேஷன் மூலம் களமிறங்க முடிவு செய்துள்ளது இந்தியன் ரயில்வேயின் வடக்கு மண்டலம்.
mozi
ஒரு சக்திவாய்ந்த ஸ்பிரேயர் பொருத்திய டிரக் ஒன்று கொசு ஒழிக்கும் மருந்தை காற்றில் உமிழ்ந்தபடி 150 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளத்தில் பயணிக்கும். இரு வாரங்களுக்கு நான்குமுறை என்ற இடைவெளியில் இந்த ஆபரேஷன் செயல்படுத்தப்படும். இதன்மூலம் அந்தப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர்களில் வாழும் கொசுக்கள் முற்றிலும் அழித்தொழிக்கப்படும்.
இந்த ஸ்பிரேயர்களில் இருந்து உமிழும் கொசு மருந்தானது 50 முதல் 60 மீட்டர்கள் வரை கடந்து செல்லும் என்று தெரியவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கொசுக்களை ஒழித்து மக்களின் சுகாதாரத்தை பேணிகாக்கும் பொதுப்பணியில் ரயில்வே கால் பதித்திருக்கிறது.