வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்கள் வசதிக்காக தனி கட்டுப்பாட்டு அறை… தமிழகஅரசு

--

சென்னை:

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்கள் வசதிக்காக தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதற்கான அதிகாரிகளையும் நியமித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பல மாநிலங்களிலும், நாடுகளில் சிக்கியுள்ளவர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகம் திரும்ப விரும்பும் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள், தமிழக அரசின் பிரத்யேக இணையதளமான http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் பதிவிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  அவர்களின் விண்ணப்பங்கள் குறித்து பரிசீலிக்க  பிரத்யேக கட்டுப்பாட்டு மையம்  3 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழகஅரசு தெரிவித்துள்ளது.