காதலுக்காக பல்கலை இணையதளத்தை முடக்கிய மாணவர்

 

தன் காதலிக்கு வாழ்த்து சொல்வதற்காக பல்கலைகழக இணையத்தை மாணவர் ஒருவர் முடக்கிய சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் ஜமியா மில்லியா இஸ்லாமியர்  பல்கலைகழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில்  இந்த பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘ஹேப்பி பர்த்டே பூஜா’ என பிறந்த நாள் வாழ்த்துகள் தோன்றின.  இந்த குறிப்புக்கு கீழ் இப்படிக்கு உன் காதலன் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது பல்கலைக்கழக வட்டாரத்தில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இணையதளத்தை முடக்கியது யார் என்பது இதுவரை தெரியவில்லை. தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணவர் யாராவது தனது காதலை தெரிவிக்க இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த சம்பவம் குறித்து பல்கலைகழகம் புகார் அளித்ததா என்பது தெரியவில்லை.