நவீன இந்தியாவின் அடையாளம் ராமர்கோவில்… குடியரசு தலைவர் டிவிட்

டெல்லி: நவீன இந்தியாவின் அடையாளம் ராமர்கோவில் என்று தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர், ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என டிவிட் பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி உட்பட, பல்வேறு தலைவர்கள்  கலந்து கொண்ட இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பிரதமர் மோடி 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை வைத்து, கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்த சிறப்பு மிக்க நிகழ்வு குறித்து,  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாகவது,

‘அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சட்டத்திற்கு இணங்க கட்டமைக்கப்பட்டிருப்பதால், இது இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் வரையறுக்கிறது. இது ராம்ராஜ்யாவின் கொள்கைகளுக்கு ஒரு சான்றாகவும் நவீன இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.