மும்பை மாநகராட்சி எதிர்கட்சி தலைவராக தமிழர் தேர்வு!!

மும்பை:

மும்பை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் சிவசேனா, பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த இரு கட்சிகளும் கூட்டணியின்றி தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜ ஆதரவுடன் சிவசேனா மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியது.

தற்போது எதிர்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிடைததுள்ளது. இதில் மும்பை மாநகராட்சியின் 176வது வார்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ரவி ராஜா மும்பை மாநகராட்சி எதிர் கட்சி தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு தமிழர்.

மும்பை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறை யாக ஒரு தமிழர் எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் அங்குள்ள தமிழர்களுக்கு பெருமையாக அமைந்துள்ளது!