நெட்டிசன்:

சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் முகநூல் பதிவு:

 

நேற்று முன்தினம் கேரளாவில், கொல்லம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் சிக்கி உயிருக்கு போராடிய தமிழக இளைஞர் முருகன்  (வயது-30) என்பவரை மீட்ட கேரள காவல்துறையினர் அவரைக் காப்பற்ற அருகில் இருந்த கேரள மருத்துவ விஞ்ஞானக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே உயிர்காப்பு உபகரணங்கள் அனைத்தும் உபயோகத்தில் இருப்பதாக கூறி உரிய சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர் அம்மருத்துவமனை மருத்துவர்கள்.

 

அதன் பிறகு திரு. ராஜூ என்பவரின் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த “மெடிசிட்டி, மெட்ரினா” ஆகிய தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் பணம் இல்லை என்பதை அறிந்து கொண்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கிறது.

 

அப்போதும் மனம் தளராத ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திரு. ராஜூ அவர்கள் அங்கிருந்து சுமார் 72கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கிய முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கும் 2மணி நேரம் காக்க வைத்திருந்து சிகிச்சை அளிக்க மறுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அதன் பிறகு அருகில் இருந்த எஸ்.யு.டி மற்றும் கிம்ஸ் மருத்துவமனைகளுக்கு சென்றும் அங்கும் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

 

விக்ரமாதித்தனாக விடாமல் அவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜூ அவர்கள் அங்கிருந்து சுமார் 70கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லம் அஜீஜியா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றிருக்கிறார். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள் பணத்தை காரணமாக வைத்தும், பல்வேறு காரணங்களைக் காட்டியும் சிகிச்சை அளிக்க மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மற்றொரு நிகழ்வு இன்னும் அதிர்ச்சியானது.