மேலும் ஒரு தமிழக விவசாயி தற்கொலை

சமீபத்தில் மரணமடைந்த வவசாயிகளில் சிலர்..

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட  தமிழக விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.  நீரின்றி பயிர் கருகுதவதும், விவசாயம் பொய்த்துமே இதற்குக் காரணம் என்கின்றனர் விவசாயிகள்.

இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் இன்று வரை 32 பேர் பலியாகி உள்ளனர். திருவாரூரில் 14 பேர், திருச்சியில் 4 பேர் என டெல்டா மாவட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே.. தேவனாம்பேட்டையில் முருகன் (வயது 50) என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இவரும், தனது வயலில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதைக் காண பொறுக்க முடியாமல், வாழ்வாதாரத்துக்கு வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.