நிலஅபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாடையை தொங்கவிட்டு ஆசிரியர் நூதன ஆர்பாட்டம்!!

லக்னோ:

நில அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் அதிகாரிக்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாடை (ஜட்டி) தொங்கவிட்டு நூதன முறையில் ஆசிரியர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் தனது நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்து,  23 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து,  உத்தரப்பிரதேசத்தில்  ஒரு ஆசிரியர், அவரது உள்ளாடைகளை கலெக்டரேட் அலுவலகத்திற்கு வெளியே தொங்கவிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அந்த கலெக்டர் அலுவலக பொறுப்பாளர்   நசரத் அளித்த புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் விஜய் சிங் மீது IBC-யின் பிரிவு 509 (சொல், சைகை அல்லது ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல்துறையினர் உள்ளாடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியவரை, கலெக்டர்  வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.