சென்னை:
புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதல்வர் இன்று கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதையடுத்து, தமிழகத்தில்  இருமொழிக்கொள்கையே அமல்படுத்தப்படும், மும்மொழிக்கொள்கை ஏற்கப்படாது என்று அறிவித்து உள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கையை ஆராய கல்வியாளர் களைக்கொண்ட  குழு அமைப்பது என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை யில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.  இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்து  தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.