சேலம்: ஈரோடு அருகே கி.மு.1500 மற்றும் கி.மு.500 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 3 தனித்தனி குத்துக்கற்களைக் கண்டறிந்துள்ளது வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஒரு குத்துக்கல் திண்டல் என்ற இடத்திலும், மற்றொரு குத்துக்கல் அஞ்சூர் என்ற இடத்திலும், மூன்றாவது கல் முத்தூர் என்ற இடத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை மூன்றுமே தனியார் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய கற்கள் பொதுவாக பழைய புதைவிடங்கள் மற்றும் அறைகளுக்கு அருகில்தான் கண்டெக்கப்படும். அதேசமயம், இக்கற்கள் வரலாற்று காலத்திற்கு முந்தைய இடமான கொடுமணல் என்ற இடத்திற்கு அருகிலேயே கண்டறியப்பட்டிருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

கதாநாயக கற்கள் மற்றும் குத்துக் கற்கள் தொடர்பான ப்ராஜெக்ட் மேற்கொள்ளும் குழுவினரால் இவை கண்டறியப்பட்டுள்ளது. சக்தி பிரகாஷ், வேலுதரன், ஸ்ரீனிவாசன் மற்றும் ஜான் பீட்டர் ஆகியோர்தான் இந்தக் குழுவின் உறுப்பினர்கள்.

இந்தக் குழுவினர், புகழ்பெற்ற அறிஞர் மற்றும் புலவர் எஸ்.ராசுவின் வழிகாட்டுதலின் பேரில், கொங்குப் பகுதியில் உள்ள கதாநாயக கற்கள், மெகாலிதிக் கால கல்திட்டைகள், நில அடையாளக் கற்குவை வட்டங்கள் தொடர்பான விபரங்களைப் பதிவிட்டு வருகிறது.