காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹாண்ட்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம்  இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.  அதிகாலை வரை இந்த சண்டை நீடித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  தீவிரவாதிகளை ஒடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.