ஆஸ்திரேலியாவைக் கலக்கும் இந்திய பெண் டீ மாஸ்டர்

டீயும் டீக்கடைகளும் இந்தியர்கள் வாழ்வில் பிரிக்கமுடியாத இடத்தைப் பெற்றவை. நண்பர்களுடனும் உறவினர்களுடனும் டீக்கடைகளில் அமர்ந்தே வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை பல தருணங்களில் எடுத்திருப்போம். சில வேளைகளில் சில டீக்கடை மீட்டிங்குகள் நமது வாழ்வையே மாற்றியிருக்கும். வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் நண்பர்களுடன் தாயகத்தில் செலவிட்ட டீக்கடை தருணங்களை நிறையவே மிஸ் பண்ணுவார்கள்.

chaiwali1

ஆஸ்திரேலியாவிலும் இதே பிரச்சனை உண்டு. இந்த குறையை போக்க அங்கு “சாய்வாலி (டீக்கடைக்காரப் பெண்)” என்ற பெயரில் டீக்கடை துவங்கிய உப்மா விர்தி என்ற 26 வயது பெண். இவ்வாண்டிற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் என்ற விருதை வென்றுள்ளார். இவர் சட்டப்படிப்பை முடித்தவராயிருந்தும் ஆஸ்திரேலியாவில் நல்ல இந்திய டீக்கடைகளுக்கான தேவையை உணர்ந்தவராய் அந்த வியாபாரத்தை கையில் எடுத்து சாதித்தும் காட்டியிருக்கிறார்.

chaiwali2

உப்மா டீக்கடையில் வியாபாரம் போக, ஆன்லைன் மூலம் டீயை கஃபேக்களுக்கும், உணவகங்களுக்கும் விற்கிறார். அதுபோக டீ தயாரிக்கும் அருமையான கலையை அடுத்தவர்களுக்கும் கற்றுத்தருகிறார்.