நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் இஞ்சின் தடம்புரண்டது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையத்திலிருந்து, தினமும் காலை 7.15 மணிக்கு கோவைக்குச் செல்லும் பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். அந்த ரயிலின் பெட்டிகள் இரண்டாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை முதலாவது பிளாட்பாரத்துக்கு மாற்றும் முயற்சிக்காக  அந்த ரயில் பெட்டிகளில் இன்ஜினை இணைக்க முயற்சித்தனர்.

இதற்காக யில் இன்ஜின் கொண்டுவரப்பட்டபோது, திடீரென தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது.  உடனடியாக அந்த இன்ஜினை, ஓட்டுநர், சாதுர்யமாக நிறுத்தினார். அதனால் கவிழ்ந்து விழாமல் அப்படியே நின்றுவிட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனாலும்  அந்த தண்டவாளத்தில் ரயில்களை இயக்க முடியாததால், மாற்றுப் பாதைகள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  உயர் அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில் இன்ஜினைத் தூக்கி, சரிசெய்யும் பணிகளை   முடுக்கிவிட்டனர்.