ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற 237 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் உஸ்மான் கவாஜா 50 ரன்கள் எடுத்திருந்தார்.

india

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டியை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றிப்பெற வேண்டுமென்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தனது நூறாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். பின்னா் 50 ரன்களில் அவரும் ஆட்டம் இழந்தாா்.

அதனை தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்த ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. அதேபோல் டி20 போட்டிகளில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் முகமத் ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், கேதா் ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.