என் தந்தையின் நற்பெயரை கெடுக்க யாராலும் முடியாது : ராகுல் காந்தி

டில்லி

சேக்ரட் கேம்ஸ் என்னும் பெயரில் வரும் இணைய தொடரால் தன் தந்தையின் நற்பெயரைக் கெடுக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இணைய தொடர்கள் பல பிரபலமாகி வருகின்றன.   அவைகளில் சேக்ரட் கேம்ஸ் (SACRED GAMES)  என்னும் பெயரில் வரும் தொடரும் ஒன்றாகும்.   நெட்ஃபிளிக்ஸ் இணைய தளத்தில் வெளி வரும் இந்தத் தொடரில் இந்திய அரசியல் நிகழ்வுகள் பற்றி சொல்லப்படுகிறது.

இந்த தொடரில் மறைந்த பிரதமர் ராகுல் காந்தியின் வாழ்க்கை மற்றும் போபர்ஸ் பீரங்கி முறைகேடு உளிட்ட பல விவகாரங்கள் வெளி வருகின்றன.   அது மட்டுமின்றி ஷா பானு வழக்கில் ராஜீவ் காந்தியின் நிலைப்பாடு போன்றவைகளும் அலசப்படுகின்றன.  அத்துடன் இந்த தொடரில் நிர்வாண காட்சிகள் உள்ளிட்ட பல ஆட்சேபத்துக்குரியவை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொடரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   தற்போது காங்கிரஸ் தலைவரும் மறைந்த ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார்.

அதில் அவர், “பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கருத்து சுதந்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.   நானும் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை எனவே நம்புகிறேன்.   எனது தந்தையார் நாட்டின் நலனுக்காகாவே வாழ்ந்தார், அதற்காகவே மரணம் அடைந்தார்.  ஒரு கற்பனையான இணய தொடரில் வரும் கதாபாத்திரத்தைக் கொண்டு அவர் புகழை யாரும் கெடுத்து விட  முடியாது.” என பதிந்துள்ளார்.

You may have missed