அமெரிக்கா: சொந்த மகள், மகனையே திருமணம் செய்துகொண்ட தாய்

டெக்சாஸ்:

ரு பெண்மணி தனது சொந்த மகனையும், மகளையும் திருமணம் செய்துகொண்டது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்  44 வயதான ‘பேட்ரிகா ஸ்பான்’ என்ற இந்த பெண்மணி.   இவர் தனது கணவர் ‘ஸ்பான்’ என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்  விவாகரத்து செய்தார்.

இதையடுத்து அவர்களது  இரு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை, அவர்களது பாட்டியே தத்து எடுத்துக்கொண்டார்.

பேட்ரிகா ஸ்பான் தன் குழந்தைகளை கடந்த இரு ஆண்டுகளாக பார்க்கவில்லை.

2015ம் ஆண்டின் இறுதியில் பேட்ரிகா தன் மகள் மிஸ்டி ஸ்பானை சந்தித்தார் அப்போது முதலே மகளென்றும் பாராமல் காதலிக்க ஆரம்பித்தார். பிறகு இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள். தங்களது வாழ்க்கை வெளியில் தெரியாமல்  2016ம் ஆண்டு இறுதி வரை ஒன்றாக வாழ்ந்தனர்.

இந்த நிலையில் பேட்ரிகா தனது மகனையும் திருமணம் செய்துகொண்டார்.  இதனால் பேட்ரிகாவுக்கும், மிஸ்டிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது.

தற்போது இது  குழந்தைகளின் பாட்டி மூலம் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு டெக்சாஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதே நேரம், அந்த குழந்தைகள் மூவரும் அவர்கள் பாட்டியல் முறையாக தத்து எடுக்கப்பட்டு இருப்பதால் பேட்ரிகா அதிகாரப்பூர்வ தாய் இல்லை. ஆகவே பேட்ரிகா  மீதான தண்டனை நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.