தேநீர் மட்டுமே 33 ஆண்டுகளாக பருகி உயிர் வாழும் சத்தீஸ்கர் பெண்

பாராடியா, சத்திஸ்கர்

த்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் கடந்த 33 ஆண்டுகளாக தேநிர் மட்டுமே பருகி வருகிறார்..

தேநீர் அருந்தும் பழக்கம் மக்களிடையே அதிகம் உள்ளது. அதற்காக கிண்டல் செய்பவர்களும் அதிகம் உள்ளனர். பொதுவாக அவர்களை அனைவரும் தேநீர் அருந்தியே உயிர் வாழ்கின்றனர் என கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் அதைப் போல தேநீர் மட்டுமே அருந்தி ஒரு பெண் உயிர் வாழ்கிறார் என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும்.

சத்தீஸ்கர் மாநிலம் பாராடியா என்னும் ஊரில் வசிப்பவர் பில்லி தேவி. தற்போது 44 வயதாகும் இந்தப் பெண் தனது 33 ஆம் வயதில் இருந்து உணவு உட்கொள்வதை நிறுத்தி விட்டார். அவர் தற்போது தேநீரை மட்டுமே தனது உணவாக கொள்கிறார். இதனால் அவரை அந்த ஊர் மக்கள் “சாய் வாலி சாச்சி” என செல்லமாக அழக்கின்றனர். சாச்சி என்றால் சித்தி எனவும் சாய் என்றால் தேநீர் எனவும் பொருளாகும்.

பில்லி தேவியின் தந்தையான ரதி ராம், ”அவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக ஜனக்பூருக்கு சென்றார். அவர் மீண்டும் வந்ததும் உணவு உட்கொள்வதை முழுவதுமாக நிறுத்தி விட்டு தேநீர் மட்டும் பருக தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் எங்கள் வற்புறுத்தலுக்காக தேநீருடன் பிஸ்கட், ரொட்டி ஆகியவற்றை சாப்பிட்டவர் அதன் பிறகு தேநீரை மட்டுமே பருகி வருகிறார்.

பில்லி தேவி தேநீரைத் தவிர உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ள மாட்டார் தற்போது பால் சேர்க்காத தேநீர் மட்டுமே பருகி வருகிறார். வீட்டை விட்டு வெளியே வருவதை அடியோடு நிறுத்தி விட்டார். சூரிய உதயத்துக்கு பிறகு ஒரு கப் கறுப்பு தேநீர் அருந்துவதுடன் சரி. ஒரு சில நாட்களில் முழு நாளும் சிவனை பூஜை செய்த படி இருப்பார். ” என தெரிவித்துள்ளார்.

இந்த பெண்ணின் சகோதரர் பிகாரிலால், “இவ்வாறு தேநீர் மட்டும் அருந்தும் எனது சகோதரியை பற்றி அறிந்துக் கொள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர்களால் அவர் உடலில் எவ்வித குறைபட்டையும் கண்டறிய முடியவிலை. பல மருத்துவர்கள் அவரை சோதனை செய்துள்ளனர். ஆனால் ஒருவராலும் அவருக்கு ஏதும் குறை உள்ளதாக கண்டறிய முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சத்தீஸ்கர் மருத்துவர் குப்தா, “இந்த விஷயம் ஆச்சரியமாக உள்ளது. எந்த ஒரு நபராலும் 33 ஆண்டுகள் தேநீருடன் உயிர் வாழ முடியாது, ஒரு சிலர் நவராத்திரியின் போது 9 நாட்களும் தேநீர் மட்டுமே அருந்துவதுண்டு. ஆனால் ஒரு பெண் 33 வருடங்கள் தேந்ந்ரி மட்டுமே அருந்தி உயிர் வாழ்கிறார் என்பது சாத்தியம் கிடையாது” என கருத்து தெரிவித்துள்ளார்.