67 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை!

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் 67 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2004ம் ஆண்டு லிசா மாண்ட்கோமெரி என்ற பெண்மணி, மிசோரியில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு விஷ ஊசி போடப்பட்டு அத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், கடந்த 1953ம் ஆண்டு பொன்னி ஹீடி என்ற பெண்மணி மரண தண்டனை வழங்கப்பட்டு, அமெரிக்க அரசால் கொலை செய்யப்பட்டார். அவர் மிசோரியிலுள்ள கேஸ் சேம்பரில் வைத்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.