டில்லி

டில்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய உடை அணிந்த ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டில்லி நகரில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் ஐவிஒய் – தி ஐலண்ட் பார் என்னும் உணவகம் அமைந்துள்ளது.  இந்த உணவகத்துக்கு சங்கீதா கே நாக் என்னும் பெண் வந்துள்ளார்.  அவரை உணவகக் காவலர் தடுத்து நிறுத்தி உள்ளார்.  அதற்கு சங்கீதா காரனம் கேட்டபோது அவர் இந்திய பாரம்பரிய உடை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சங்கீதா எவ்வளவோ வாதாடியும் அவரை உள்ளே அனுமதிக்கக் காவலர் மறுத்துள்ளார்.  அவர் இந்த நிகழ்வை வீடியோ படமாக்கி தனது டிவிட்டரில் பதிந்துள்ளார். அது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் சக்கீதா, “ஐவிஒய் உணவகத்தில் எனக்கு ஒரு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டுள்ளது.  வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள இந்த உணவகத்தில் பாரம்பரிய உடைக்கு அனுமதி இல்லை எனக் கூறி என்னை உள்ளே விடவில்லை.  இந்தியாவில் இருக்கும் ஒரு உணவகத்தில் மற்ற உடைகளை மட்டுமே அனுமதிப்போம் என்றால் இந்தியராய் இருப்பதில் என்ன பெருமை?” எனப் பதிந்துள்ளார்.

உலகில் உள்ள பல உணவகங்களில் இந்திய உடைகளைப் பற்றி தெரியாததால் அனுமதி மறுக்கப்படுவதுண்டு.    ஆனால் இந்தியாவிலுள்ள உணவகத்திலேயே இவ்வாறு மறுக்கப்படுவதால் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   காங்கிரஸ் தலைவர் ஷர்மிஷ்டா முகர்ஜி  இதை தனது டிவிட்டரில் மறுபதிவு செய்து அதில் டில்லி முதல்வர் மற்றும் பிரதமரை இணைத்துள்ளார்.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=Cpc-ifzWphk]