திஸ்பூர்:

அசாம் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் ‘‘க்யூலக்ஸ்’’ ரக கொசு மூலம் பரவும் வைரஸ் காரணமாக ‘‘ஜப்பானிஸ் என்சபலிடிஸ்’’ என்ற கொடூர நோய் தாக்குதல் ஏற்படும். இந்த வைரஸ் தாக்குதலில் நூற்று க்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். மேலும், இந்த வைரஸ் தாக்கினால் மரணம் அல்லது நிரந்த ஊனம் நிச்சயம்.

கடந்த 2016ம் ஆண்டில் இந்த நோய்க்கான தடுப்பூசிக்கு பற்றாகுறை ஏற்பட்டுது. இதனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவச தடுப்பூசி திட்டத்தை அசாம் அரசு தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் எதிர்காலத்தில் குழந்தை பிறக்கும் தன்மையை இழக்க செய்யும் வகையில் மாநில அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று கிராம மக்கள் மத்தியில் வதந்தி வேகமாக பரவியது.

இதனால் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தடுப்பூசி முகாம் வெகுவாக பாதித்தது. பல இடங்களில் முகாமிற்கு சென்ற பணியாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஆனால், சல்மாரா என்ற மாவட்டத்தில் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 31 வயதாகும் இளம் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான அன்பாமுதனின் தீவிர செயல்பாட்டால் இத்திட்டம் வெற்றி கண்டுள்ளது.

இவர் அந்த மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்துவதோடு, நேரடியாக முகாமிற்கு சென்று திட்டம் குறித்து மக்களுக்கு பயிற்றுவிக்கிறார். கிராமங்களில் உள்ள மசூதிகள் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேரடியாக இவரே சென்று நடத்துகிறார். நோய் தாக்குதல் ஏற்படும் பருவகாலம் தொடங்குவதற்குள் இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற லட்சியத்துடன் பணியாற்றி வருகிறார்.

மசூதிகளில் உள்ள மவுலானா அல்லது இமாம்களுடன் பேசி, பின்னர் கிராம மக்களை வரவழைத்து அவர்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி வருகிறார். தினமும் குறைந்தபட்சம் 5 முகாம்களை ஒரு கிராமத்தில் நடத்துகிறார். இதர பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் தடுப்பூசி போட மறுத்து வரும் நிலையில் இவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் ஆர்வத்துடன் வந்து த டுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ராணுவத்தில் நான் பணியாற்றிய அனுபவம் இந்த திட்டத்தை செயல்ப டுத்த எனக்கு உதவியாக இருந்தது. வதந்திகளை எப்படி கையாள வேண்டும் என்று நான் அங்கு கற்று இருந்தேன். இந்த சமயங்களில் அதிகாரியாக செயல்படாமல் மக்களோடு மக்களாக இறங்கி செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பது ராணுவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம். அதை தான் இங்கே செயல்படுத்தினேன்.

மேலும் பொதுமக்கள் முன்னிலையில் முதல் ஆளாக நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இது மக்களு க்கு பெரிய உத்தரவாதமாக அமைந்தது’’ என்றார்

2014ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த இவர் கோவையை சேர்ந்தவர். இவர் ராமகிருஷ்ணா மிஷனில் இயற்பியல் பட்டம் பெற்றவர். முன்னதாக இவர் 2005ம் ஆண்டில் இருந்து 2011ம்ஆண்டு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2010ம் ஆண்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக சிறப்பான முறையில் செயல்பட்டதற்காக இவர் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.