யானையுடன் அபிலாஷ் – பழைய புகைப்படம்

பெங்களூரு

துபோதையில் பென்னர்கட்டா மிருகக்காட்சி சாலைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் யானை தாக்கி மரணம் அடைந்தார்.

இது பற்றி போலீஸ் தர்ப்பில் கூறப்படுவதாவது :

பெங்களூரு ஹிம்மத் நகரை சேர்ந்த சேல்ஸ் ரெப்ரெசெண்டேடிவ் அபிலாஷ்.  அவரும் அவர் நண்பர்கள் மூவரும் கடந்த செவ்வாய் மாலை பன்னார்கட்டாவில் உள்ள உயிரியல் பூங்கா (மிருகக்காட்சி சாலை) க்கு சென்றுள்ளனர். அன்று வார விடுமுறை என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மூவரும் பக்கத்திலிருந்த ஹக்கி பக்கி காலனி வழியாகச் சென்று திருட்டுத்தனமாக உள்ளே சென்றுள்ளனர்.  மூவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.  அவர்கள் நுழைந்த இடம் யானைகளை அடைத்து வைக்கும் இடமாகும்.  அங்கு 20 யானைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

அந்த யானைகள் அனைத்தும் அதிகம் பழக்கப்படுத்தாத மற்றும் கோயிலில் வன்முறை செய்ததின் காரணமாக இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளன.  அபிலாஷ்க்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும்.  அதனால் அங்கிருந்த சுந்தர் என்னும் 16 வயது யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.  என்ன காரணத்தினாலோ ஆத்திரமடந்த அந்த சுந்தர் என்னும் யானை அபிலாஷை தாக்கி உள்ளது.  இதைக் கண்ட அவருடைய நண்பர்கள் மூவரும் தப்பி ஓடி விட்டனர்.

அன்று மாலை 6.30 மணிக்கு அங்கு வந்த பணியாளர்கள் யானை கொட்டடிக்குள் ஒரு வாலிபர் மரணம் அடைந்ததைக் கண்டு இயக்குனர் சந்தோஷ் குமாருக்கு தெரிவித்து உள்ளனர்.  அவர் வந்து பார்க்கும் போது அபிலாஷ் இறந்து விட்டார்.  உள்ளே செல்ல பயந்த காவலாளிகள் வெளியே இருந்தே அபிலாஷின் சடலத்தை இழுத்து இருக்கிறார்கள்.  செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் திருட்டுத்தனமாக நுழைந்திருக்கக் கூடும் என சந்தேகித்து அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அபிலாஷின் நண்பர்கள் பற்றி தெரிய வந்துள்ளது.  போலீஸ் அவர்களை விசாரித்து வருகின்றனர்.

அபிலாஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.  அதன் முடிவு வந்த பிறகே நிச்சயமாக யானை தாக்கி மரணம் என அறிவிக்க முடியும் என்பதால் இப்போது சந்தேகமான முறையில் மரணம் என வழக்கு பதியப்பட்டுள்ளது.

”யானை சுந்தர் நல்ல உடல்நிலையிலும் மனநிலையிலும் தான் இருந்தது.  முழு விசாரணைக்குப் பின்னரே சுந்தரால் தான் அபிலாஷ் கொல்லப்பட்டார் என சொல்ல முடியும்.  யானைகள் தங்களை துன்புறுத்தினாலோ, அல்லது பயம் காரணத்தினால் தங்களின் சுய பாதுகாப்புக்காக மட்டுமே மனிதர்களை தாக்கும்,  மேலும் சுந்தர் இதுவரை எந்த மனிதரையும் தாக்கியது இல்லை” என பீட்டாவின் பெங்களூரு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அதையே சுந்தரின் வெட்னரி டாக்டரும் ஆமோதித்தார்.  பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே எதையும் சரியாகச் சொல்ல முடியும் என போலீஸ் சொல்கிறது.